டயகம நகரில் குரங்கு தொலை: மக்கள் அச்சத்தில்!

துவாரக்சன்

டயகம நகரமும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் அண்மைக்காலமாக குரங்குகளின் தொல்லை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கடும் அச்சத்தில் வாழும் நிலை உருவாகியுள்ளது.

வீடுகளுக்குள் புகுந்து உணவுப் பொருட்களை திருடுவது, சந்தைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பொருட்களை சேதப்படுத்துவது,
மேலும் சிறுவர் மற்றும் பெண்களை அச்சுறுத்தும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் குரங்குகள் கூட்டமாகச் சுற்றித் திரிவதால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சில சந்தர்ப்பங்களில், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் கூட குரங்குகளின் தாக்குதலுக்குள்ளாகும் அபாய நிலை காணப்படுவதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, வாகனங்களின் மீது ஏறி சேதப்படுத்தும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண அரசாங்கமும், வனவிலங்கு அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குரங்குகளை கட்டுப்படுத்துவதற்கான திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகியுள்ளது.

Related Articles

Latest Articles