அகரகந்தை புனித ரீத்தம்மாள் ஆலய வருடாந்த திருவிழா!

அகரகந்தையில் அமைந்திருக்கும் புனித ரீத்தம்மாள் ஆலயத்தின் வருடாந்த பெருவிழா இன்று ஆரம்பமாகின்றது. இவ்விழாவிற்கான விசேட நிகழ்வுகள் பின்வருமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன:

இன்று (கொடியேற்றம்):

மாலை 6:00 மணியளவில் விசேட ஆராதனை, திருப்பலி மற்றும் அதனைத் தொடர்ந்து திருவிழாக் கொடியேற்றம் இனிதே நடைபெறும்.

மே 15, வெள்ளிக்கிழமை:

மாலை 5:30 மணியளவில் விசேட நற்கருணை ஆராதனை மற்றும் நற்கருணைப் பவனி நடைபெறும்.

மே 16, சனிக்கிழமை (திருவிழா நற்கருணை விருந்து):
காலை புனித ரீட்டம்மாள் ஆலயத்தில் வருடாந்த திருவிழா கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். அதனைத் தொடர்ந்து, புனிதரின் திருச்சொரூப வீதி ஊர்வலம் சிறப்பாக இடம்பெறும்.

இந்த வருடாந்தப் பெருவிழாவில் இறைமக்கள் அனைவரும் திரளாகக் கலந்துகொண்டு, புனித ரீட்டம்மாளின் அருளையும் ஆசீரையும் பெற்றுக்கொள்ளுமாறு ஆலய நிர்வாக சபையினர் அன்போடு அழைக்கின்றனர்.

Related Articles

Latest Articles