முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்திய பின்னரே யாழ்ப்பாணம் மாநகர சபையின் இன்றைய அமர்வு ஆரம்பிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாநகர மேயர் திருமதி விவேகானந்தராஜா மதிவதனி தலைமையில் இன்றைய சபை அமர்வுகள் நடைபெற்றன. சபை ஆரம்பமாவதற்கு முன்னதாக, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கான அழைப்பை மேயர் விடுத்தார்.
சபை மண்டபத்தில் முள்ளிவாய்க்கால் அவலத்தை சித்தரிக்கும் ஒளிப்படம் வைக்கப்பட்டிருந்தது.
அதன் முன்பாகப் பொதுச் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, சபையில் பிரசன்னமாகியிருந்த அனைத்து உறுப்பினர்களும் மலர் தூவித் தமது அஞ்சலியைச் செலுத்தினர்.
மலர் அஞ்சலியைத் தொடர்ந்து, உயிரிழந்த உறவுகளுக்காகச் சபையில் அக வணக்கம் செலுத்தப்பட்டது.
இந்த உணர்வுபூர்வமான நினைவேந்தல் நிகழ்வுகளுக்குப் பின்னரே, மாநகர சபையின் வழமையான சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
