மின்னல் தாக்கி இளைஞன் பலி: யாழில் சோகம்!

மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் பலியான பெருந்துயர் சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ். சுழிபுரத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் இன்றையதினம் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும்போது அவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அனர்த்தம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles