பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பளம் தொடர்பில் பெருந்தோட்டக் கம்பனிகளே முடிவை அறிவிக்க வேண்டும் – என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று முற்பகல் நடைபெற்றது. இதன்போது ஆயிரம் ரூபா தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
” ஆயிரம் ரூபா தொடர்பில் கொள்கை ரீதியிலான முடிவுக்கே அரசாங்கத்தால் வரமுடியும். அந்த முடிவை நாம் எடுத்துள்ளோம். தொழிற்சங்கங்களும், கம்பனிகளும் பேச்சுவார்த்தை நடத்திதான் முடிவுக்கு வரவேண்டும். இது விடயத்தில் தொழில் அமைச்சரும் தலையிட்டுள்ளார். விரைவில் தீர்வு கிடைக்கும் என நம்புகின்றோம். அரசால் இறுதி முடிவை எடுக்க முடியாது.” – என்றார்.