சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147 [இந்திய ரூ.] கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இத்திரைப்படம், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ‘வீரபத்ருடு’ என்ற பெயரில் வெளியானது.
இந்தியாவில் மட்டும் இப்படம் சுமார் ரூ.80 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள நிலையில், வெளிநாடுகளில் ரூ.42 கோடியை ஈட்டியுள்ளது. சூர்யாவின் திரைப்பயணத்திலேயே மிக அதிகமான ஓபனிங் வசூலைப் பெற்ற திரைப்படமாக ‘கருப்பு’ உருவெடுத்துள்ளது.










