இந்திய விமானப்படை தளபதி எயார் சீஃப் மார்ஷல் Amar Preet Singh PVSM, AVSM, இன்று (19 மே) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, பாதுகாப்பு செயலாளர் மற்றும் எயார் சீஃப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் இருதரப்பு முக்கியத்துவம் மற்றும் பரஸ்பர அக்கறை கொண்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினர்.
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
