ஐபிஎல் 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 65-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதற்கமைய துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தாவின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதனால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
பின்னர் 148 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 13 புள்ளிகளுடன் தங்களது play-off சுற்றுக்கான வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
