” தேயிலைத் துறையையும் தொழிலாளர்களையும் பாதுகாப்பதே எமது முதன்மை இலக்கு”

இலங்கையின் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் தேயிலைத் துறையையும், அதன் முதுகெலும்பாக விளங்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களையும் பாதுகாத்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் கொழும்பு 3 கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள இலங்கைத் தேயிலைச் சபையின் தலைமை காரியாலயத்திலிருந்து காலி முகத்திடல் வரையில் இலங்கையின் பெரும்பாலான பெருந்தோட்ட மற்றும் சிறுதோட்ட தேயிலை நிறுவனங்கள் மற்றும் அதன் ஊழியர்கள் மற்றும் தோட்டத்தொழிலாளர்கள் என பெருந்திரளானோரின் பங்களிப்புடன்

“தேயிலை கைத்தொழிலை காப்போம், சமூகத்தை வளப்படுத்துவோம்” எனும் தொனிப்பொருளின் கீழ், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் தலைமையில் இலங்கைத் தேயிலைச் சபை மற்றும் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட “சிலோன் தேயிலை நடை பவனியைத்” தொடர்ந்து கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்ற விசேட விழாவில் கலந்துகொண்டு, சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் உரையாற்றும் போதே அவர் இதனை வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் தனது சொந்த வாழ்க்கை அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட பிரதியமைச்சர், தான் சாதாரண ஒரு தேயிலை தோட்டத் தொழிலாளர் குடும்பத்தில், லயன் அறையொன்றில் பிறந்து வளர்ந்தவன் என்றும், தனது தாய் மற்றும் தந்தையர் தேயிலைத் தோட்டங்களில் கொழுந்து பறித்து, வியர்வை சிந்தி, இரத்தம் சிந்தி உழைத்த உழைப்பை தான் சிறு வயது முதலே நேரில் பார்த்தவன் என்றும் உருக்கமாகக் குறிப்பிட்டார். அன்று தொழிலாளர்கள் அத்தகு இன்னல்களுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த உழைத்த நிலையில், இன்று அதே தொழிலாளர் சமூகத்தின் பின்னணியில் இருந்து வந்து, அதே பெருந்தோட்டத்துறைக்குச் சேவை செய்யும் பிரதியமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளதை தான் பெருமையாகக் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நீண்டகால சம்பளப் பிரச்சினைக்கு எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் தீர்வு கண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், முன்னதாக 1,350 ரூபாயாக இருந்த தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தச் சம்பளம், தற்போதைய அரசாங்கத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக 1,850 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார். இது தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஆரம்பப் படியே என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

மேலும், தேயிலை ஏற்றுமதிச் சந்தையில் கடந்த காலத்திற்கும் தற்போதைக்கும் இடையில் உள்ள பாரிய இடைவெளி குறித்து பிரதியமைச்சர் கவலை வெளியிட்டார். ஒரு காலத்தில் இலங்கையின் மொத்த தேயிலை ஏற்றுமதியில் 76 சதவீத பங்களிப்பை பெருந்தோட்டக் கம்பனிகளே வழங்கிய போதிலும், தற்போதைய நிலையில் கம்பனிகளின் பங்களிப்பு 20 சதவீதமாகக் குறைந்துள்ளதோடு, எஞ்சிய 70 சதவீதத்திற்கும் அதிகமான ஏற்றுமதிப் பங்களிப்பை சிறு தோட்டத் தேயிலை உரிமையாளர்களே மேற்கொண்டு வருவதாக அவர் விளக்கமளித்தார்.

கம்பனிகளின் இந்த வீழ்ச்சிக்கான காரணங்களை ஆராய்ந்து, பாரம்பரிய முறைகளில் இருந்து விடுபட்டு, நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

அண்மையில் தான் இந்தியாவுக்குச் சென்றிருந்த போது அங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் நவீன உபகரணங்கள் பயன்படுத்தப்படுவதைக் கண்டதாகவும், இலங்கையிலும் அத்தகைய நவீனமயமாக்கல் அவசியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இறுதியாக, தேயிலைத் துறையிலிருந்து பெறப்படும் லாபத்தின் ஒரு பகுதி, அதற்காக உழைக்கும் தொழிலாளர் சமூகத்திற்கும் சென்றடைய வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட பிரதியமைச்சர், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், சிறு தோட்ட உரிமையாளர்கள், தொழிற்சாலை ஊழியர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் தரகர்கள் என இத்துறை சார்ந்த அனைத்து தரப்பினரும் எவ்விதப் பாகுபாடுமின்றி ஓரணியில் திரண்டு, குறைபாடுகளை நிவர்த்தி செய்து உழைத்தால், குறுகிய காலத்திற்குள் தேயிலைத் துறை மூலமாக நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் உச்சத்திற்குக் கொண்டு செல்ல முடியும் என நம்பிக்கை வெளியிட்டார்.

* ஞான பிரசாந்தன்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles