ஈரான் போரில் 42 விமானங்களை இழந்த அமெரிக்கா?

ஈ​ரானுக்கு எதி​ரான போரில் போர் விமானங்​கள், டிரோன்​கள் உட்பட 42 அமெரிக்க ராணுவ விமானங்​களுக்கு இழப்பு அல்​லது சேதம் ஏற்​பட்​ட​தாக நாடாளு​மன்ற ஆய்வு சேவை (சிஆர்​எஸ்) அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

மேலும் தரவு வகைப்​பாடு, தொடர்ந்து நடை​பெறும் போர், இழப்புக்​கான காரணங்​களை உறுதி செய்​தல் உள்​ளிட்ட பல்​வேறு காரணி​களால் இழப்​பு​களின் எண்​ணிக்கை அதி​கரிக்​கும் என்​றும் அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

ஈரானுக்கு எதி​ரான போரின் செல​வு, ஏற்​கெனவே சுமார் 29 பில்​லியன் டால​ராக உயர்ந்துவிட்டதாக​வும் இந்​தச் செலவு அதி​கரிப்​பில் பெரும் பகு​தி, ராணுவ உபகரணங்​களை சீரமைக்க அல்​லது மாற்​று​வதற்​கான செல​வாகும் என்று பென்​டகன் தெரி​வித்​தது.

இழந்த அல்​லது சேதம் அடைந்த விமானங்​கள் பட்​டியலில், நான்கு எப்​-15 இ ஈகிள் போர் விமானங்​கள், ஒரு எப்​-35 லைட்​னிங்-2 போர் விமானம், ஒரு ஏ-10 தண்​டர்​போல்ட்-2 தரைத்தாக்​குதல் விமானம், ஏழு கேசி-135 ஸ்ராடோடேங்​கர் வானில் எரிபொருள் நிரப்​பும் விமானங்​கள், 24 எம்​கியூ-ஏ ரீப்​பர் டிரோன்​கள் உள்​ளிட்​ட​வை​யும் அடங்​கும்.

போர் இழப்​பு​கள் குறித்த விரி​வான மதிப்​பீட்டை அமெரிக்க பாதுகாப்​புத் துறை இது​வரை வெளி​யிட​வில்​லை.

இந்​நிலை​யில் அமெரிக்க நாடாளு​மன்​றம் மற்​றும் அதன் குழுக்​களுக்கு கொள்கை மற்​றும் சட்​ட ரீ​தி​யான பகுப்​பாய்​வு​களை வழங்​கும் சிஆர்​எஸ் அமைப்​பானது, செய்​தி​கள் மற்​றும் அமெரிக்​கப் பாதுகாப்​புத் துறை, அமெரிக்க மத்​திய கட்​டளைப் பிரிவு ஆகியவற்​றின் அறிக்​கைகளை ஆய்வு செய்து இந்த இழப்பு விவரத்தை தொகுத்​துள்​ளது.

ஈரானுக்கு எதி​ராக இஸ்​ரேலும் அமெரிக்கா​வும் கடந்த பிப்​ர​வரி 28ம் திகதி போரை தொடங்​கின. இதில் ஈரானின் உச்ச தலை​வர் கமேனி உட்பட பல தலைவர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles