இலங்கையின் கல்வித்துறை முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்பு!

லண்டனுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மே 20 ஆம் திகதி பிரித்தானிய கவுன்சிலின் (British Council) கல்வித்துறை அறிஞர்கள் குழுவுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான கல்விசார் ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதே இக்கலந்துரையாடலின் பிரதான நோக்கமாக அமைந்தது. குறிப்பாக ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள், ஆங்கில மொழி ஊக்குவிப்புத் திட்டங்கள், கல்விக் கட்டமைப்புகள் மற்றும் மொழித்திறன் விருத்தி ஆகிய துறைகள் குறித்து இதன்போது விரிவாகப் பேசப்பட்டது.

இதன்போது, பிரித்தானிய கவுன்சிலின் சர்வதேச அனுபவங்கள் குறித்து விளக்கமளித்த அதன் பிரதிநிதிகள், இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள தமது நிறுவன ரீதியான வேலைத்திட்டங்கள் குறித்தும் தெளிவுபடுத்தினர்.

இலங்கையின் கல்வித் துறையின் முன்னேற்றத்திற்காகத் தொழில்நுட்ப உதவிகள், ஆசிரியர் அபிவிருத்தி மற்றும் கொள்கை ரீதியான ஒத்துழைப்புகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

கல்வியின் தரத்தை உறுதிப்படுத்தும் முறைகளை மேம்படுத்துதல், ஆராய்ச்சித் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் மாணவர்களுக்கான கற்றல் வாய்ப்புகளை மேலும் அதிகரிப்பது தொடர்பாகவும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

இலங்கையின் கல்வித் துறைக்கு பிரித்தானிய கவுன்சில் வழங்கி வரும் தொடர்ச்சியான பங்களிப்பைப் பாராட்டிய பிரதமர், இத்தகைய இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles