ஆட்சியைப் பிடிக்க சஜித்தும் நாமலும் பகற்கனவு!

 

நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகப் பொய்ப் பிரசாரங்களை மக்கள் மத்தியில் கட்டவிழ்த்து விட்டு, அதன் மூலம் குறுக்கு வழியில் ஆட்சியைக் கைப்பற்றலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் அணியினரும், நாமல் ராஜபக்சவின் தரப்பினரும் பகற்கனவு காண்கின்றனர் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க கடுமையாகச் சாடியுள்ளார்.

அவர்களின் இந்தக் கனவு ஒருபோதும் நனவாகப் போவதில்லை என்றும் அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எமது அரசின் மக்கள் நலன்சார் வேலைத்திட்டங்களையும், பொருளாதாரக் கொள்கைகளையும் சகித்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சியினர், மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும் பொய்களையும் பரப்பி வருகின்றனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரண்டு தரப்பினரும் தங்களின் அரசியல் வறட்சியை மறைப்பதற்காகவே, நாடு மீண்டும் பொருளாதாரப் படுகுழியை நோக்கிச் செல்வதாகக் கூறி நாடகமாடுகின்றனர்.

மக்களின் உண்மையான தேவைகளைப் புரிந்துகொண்டு, நாட்டின் தூய்மையான நிர்வாகத்துக்காகப் பாடுபட்டு வரும் எமது அரசுக்கு நாட்டு மக்கள் அமோக ஆதரவை வழங்கியுள்ளனர்.

எமது அரசானது நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தைக் கொண்ட, மக்களின் பேராதரவைப் பெற்ற ஒரு பலமிக்க அரசாகும். ஜனநாயக ரீதியில் மக்கள் வழங்கிய இந்த ஆணையை எந்தவொரு அரசியல் சக்தியாலும், பொய்ப் பிரசாரங்களாலும் அசைக்கவோ அல்லது வீழ்த்தவோ முடியாது.

கடந்த காலங்களில் நாட்டைச் சீரழித்தவர்கள் மீண்டும் குறுக்கு வழியில் அதிகாரத்தைக் கைப்பற்ற நினைப்பது வேடிக்கையானது. எமது அரசு தூய்மையான பயணத்தை எவ்வித தடங்கலுமின்றித் தொடரும்.” – என்றார்.

நன்றி – மாலைமுரசு

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles