மெஸ்ஸி தலைமையில் அர்ஜெண்டினா அணி அறிவிப்பு

அடுத்த மாதம் தொடங்கும் ஃபிபா உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு நடப்பு உலக சாம்பியனான அர்ஜெண்டினா கால்பந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியை மெஸ்ஸி கேப்டனாக வழிநடத்துடுகிறார்.

ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை உலக்கிண்ண தொடரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ நாடுகள் இணைந்து போட்டிகளை நடத்துகின்றன.மொத்தம் 48 அணிகள் களம் காண்கின்றன. 39 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் 104 போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இந்நிலையில் நடப்பு உலக சாம்பியனான அர்ஜெண்டினா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 26 வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

குரூப்-ஜே பிரிவில் இடம்பெற்றுள்ள அர்ஜெண்டினா அணி, அல்ஜீரியா, ஆஸ்திரியா, ஜோர்டான் உள்ளிட்ட அணிகளுடன் குரூப் சுற்றில் விளையாடுகிறது.

கடந்த 2022-ல் கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்தன.

ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க பெனல்டி ஷ_ட் அவுட் நடத்தப்பட்டது. இதில் 4-2 என அர்ஜெண்டினா வெற்றி பெற்றது.

இந்த முறை சாம்பியன் படத்தை தக்கவைக்கும் முனைப்பில் அர்ஜெண்டினா களம் காண்கிறது.

38 வயதான அந்த அணியின் தலைவர் மெஸ்ஸிக்கு இது ஆறாவது உலகக் கோப்பை தொடராக அமைந்துள்ளது.

அர்ஜெண்டினா அணி விவரம்

கோல்கீப்பர்கள்:
எமிலியானோ மார்டினெஸ்,
ஜெரோனிமோ ருல்லி,
ஜுவான் மூசோ

Defenders

லியாண்ட்ரோ பலேர்டி,
நிக்கோலஸ் டாக்லியாஃபிகோ,
கோன்சாலோ மான்டியல்,
லிசாண்ட்ரோ மார்டினெஸ்,
கிறிஸ்டியான் ரொமேரோ,
நிக்கோலஸ் ஒடமெண்டி,
ஃபகுண்டோ மெடினா,
நஹுவேல் மோலினா

Midfielders

லியாண்ட்ரோ பரேடெஸ்,
ரோட்ரிகோ டி பால்,
வாலண்டின் பார்கோ,
ஜியோவானி லோ செல்சோ,
எக்ஸிகுயல் பலாசியோஸ்,
அலெக்சிஸ் மேக் அலிஸ்டர்,
என்ஸோ பெர்னாண்டஸ்

Forwards

ஜூலியன் அல்வாரெஸ்,
மெஸ்ஸி,
நிக்கோலஸ் கோன்சாலஸ்,
தியாகோ அல்மடா,
கியுலியானோ சிமியோன்,
நிகோ பாஸ்,
லாடரோ மார்டினெஸ்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles