இந்திய பிரதி தூதுவர், ஜே.வி.பி. செலயர் சந்திப்பு!

மூன்றாண்டு காலப் பணியை நிறைவு செய்து
விடைபெறுகிறார் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர்

– மனிதாபிமான உதவிகளுக்கு ஜே.வி.பி. நன்றி தெரிவிப்பு

ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, இலங்கையிலுள்ள இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டேயை நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

கொழும்பில் தனது மூன்று ஆண்டுகால இராஜதந்திரப் பணிக்காலத்தை நிறைவு செய்யும் பிரதி உயர்ஸ்தானிகர் பாண்டேயின் இறுதி உத்தியோகபூர்வ சந்திப்பாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜே.வி.பியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக அண்மைய காலங்களில் எடுக்கப்பட்ட இருதரப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இலங்கையில் பிரதி உயர்ஸ்தானிகராகப் பணியாற்றிய காலப்பகுதியில் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே வழங்கிய நட்புறவுடனான பங்களிப்புகளுக்குப் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இதன்போது தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். குறிப்பாக, ‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு இந்தியா வழங்கிய மனிதாபிமான உதவிகள் குறித்தும் அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

தனது இராஜதந்திரக் கடமைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து இலங்கையிலிருந்து விடைபெறத் தயாராகும் பிரதி உயர்ஸ்தானிகர் பாண்டேயின் எதிர்காலப் பணிகள் சிறக்கத் தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளையும் ரில்வின் சில்வா இதன்போது பகிர்ந்துகொண்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles