“எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தயார். தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டணி பற்றி பேசலாம். தற்போது அனைத்து எதிரணிகளும் கிராமங்களுக்கு சென்று மக்களை தெளிவுபடுத்த வேண்டும்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
“அரசாங்கம் மக்கள் பற்றி சிந்திப்பதில்லை. மாறாக அனைத்து சுமைகளும் மக்கள்மீது திணிக்கப்படுகின்றன. இந்த அரசாங்கத்தின் இயலாமை புலப்பட்டுவருகின்றது.
எந்த கட்சியின் ஆயுள் குறைந்துவருகின்றது என்பதை அறிய தேர்தல் நடத்தப்பட வேண்டும். மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் நல்லது.
ஏனெனில் ஜனாதிபதியின் பிரதிநிதிகளிடம் அல்லாமல், மக்கள் பிரதிநிதிகளிடமே ஆட்சி ஒப்படைக்ப்பட வேண்டும். அப்போதுதான் பொறுப்புகூறல் ஏற்படும்.
நாட்டு மக்களுக்கு இந்த அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றப்படும்வரை நாம் இந்த அரசாங்கத்துடன் அரசியல் ரீதியில் மோதுவோம்.
நாம் வலுவான சக்தியாக மீண்டெழுந்துள்ளோம். எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள தயார்.
நாம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியாகும். போட்டிக்கு முன்னர் நாம் பயிற்சியில் ஈடுபட வேண்டும். இறுதியில் அணியைத் தெரிவுசெய்யலாம்.” – என்றார்.










