09 பேரை பலியெடுத்த தீ விபத்து: இன்று களப் பரிசோதனை!

அங்குருவாதொட்ட, பட்டகொட முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான களப் பரிசோதனைகள் இன்று(04) காலை மேற்கொள்ளப்படவுள்ளன.

அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் மற்றும் ஹொரணை நீதவான் ஆகியோர் களப் பரிசோதனையில் ஈடுபடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹொரணை – அங்குருவாதொட்ட, பட்டகொட பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தில் நேற்று(03) பரவிய தீயில் சிக்கிய 51 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் 09 சடலங்கள் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ.வூட்லர் தெரிவித்தார்.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

Related Articles

Latest Articles