அடை மழை காரணமாக தலவாக்கலை, பூண்டுலோயா பிரதான வீதியில் மடக்கும்பர புது காடு பகுதியில் பாரிய மரம் சரிந்து விழுந்துள்ளது.
இவ்வனர்த்தம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இதனால் மேற்படி வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாடசாலை மாணவர்கள், தொழிலுக்கு செல்பவர்கள் என பலரும் நெருக்கடியை எதிர்கொண்டனர்.
எனினும், வட்டக்கொடைவரை போக்குவரத்து இடம்பெறுகின்றது.
இப்ப பாதை சரி செய்யும் வரை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
கௌசல்யா.

