மாகாணசபைத் தேர்தலென்பது மக்களின் ஜனநாயக உரிமையாகும். எனவே, சட்டமூலங்கள்மீது பழிவை சுமத்திவிட்டு அரசாங்கம் நழுவக்கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான நவீன் திஸாநாயக்க கூறியவை வருமாறு ,
“ மாகாணசபைத் தேர்தல் தற்போது நடத்தப்பட வேண்டும். அதனை செய்யுமாறு அரசாங்கத்தை நாம் வலியுறுத்துகின்றோம்.
எனினும், சட்டம்மீது பழியை சுமத்திவிட்டு தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. இதனை ஏற்க முடியாது.
ஏனெனில் தேர்தலென்பது மக்களின் ஜனநாயக உரிமையாகும். அந்த உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன இணைந்தே மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்ள எதிர்பார்க்கின்றன.கண்டி மாவட்டத்தில் ஒன்றாகவே களமிறங்குவோம்.”- என்றார் நவீன் திஸாநாயக்க.










