தவெக அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று!

தமிழக வெற்றிக் கழக அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (05) நடைபெறவுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.

அமைச்சரவையில் முதல்வர் விஜய் உட்பட மொத்தம் 35 பேர் இடம்பெற்றுள்ளனர். அனைவருக்கும் துறைகள் ஒதுக்கப்பட்டன.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் இந்திய நேரப்படி இன்று முற்பகல் 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தவெக அரசு பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டம் என்பதால் மக்கள் மத்தியில் இது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

Latest Articles