இலங்கையில் தனது பதவி காலத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு மீண்டும் தனது தாய் நாடு திரும்பத் தயாராகி வரும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் (கலாநிதி) சத்தியஞ்சல் பாண்டே (Dr. Satyanjal Pandey) கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்தார்.
தனது பதவி காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களிடமிருந்தும், அவரது தரப்பிலிருந்தும் கிடைத்த அளப்பரிய ஒத்துழைப்பிற்கு இதன்போது இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.










