ஐசிசி மகளிர் உலகக்கிண்ண தொடர் இன்று இங்கிலாந்தில் கோலாகலமாக ஆரம்பமாகின்றது.
முதல் போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு இப்போட்டி பெர்மிங்காமில் உள்ள எக்பாஸ்டன் மைதானத்தில் ஆரம்பமாகும்.
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவருகின்றது.
இதுவரை 9 முறை நடந்துள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 6 முறை ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
கடைசியாக 2024-ஆம் ஆண்டு நடந்த மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில் 10-ஆவது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகின்றது.
இந்தியா உள்பட 12 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து நாட்டில் நடைபெறுகிறது.
மொத்தம் 12 அணிகள் 2 பிரிவுகளாக விளையாட உள்ளன.
இதில், இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்குள் நுழையும்.
அரையிறுதி சுற்றில் வெற்றி பெறும் 2 அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டியில் இங்கிலாந்து – இலங்கை அணிகள் மோதுகின்றன.
