முறிந்து விழுந்தது மரம்: போக்குவரத்து பாதிப்பு!

கண்டி, ஹந்தானை வழியாக கலஹா செல்லும் பிரதான வீதியின் உடுவெல பகுதியில் இன்று (12) காலை பாரிய மரமொன்று முறிந்து விழுந்து விழுந்துள்ளது.

அப்பகுதியில் நிலவி வரும் கடுமையான மழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாகவே இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மரம் முறிந்து விழுந்ததன் காரணமாக, அப்பகுதியில் இருந்த பாரிய மின்சாரத் தூண்களும் உடைந்து சேதமடைந்துள்ளன. இதனால் அப்பகுதிக்கான போக்குவரத்து மற்றும் மின்சார விநியோகம் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles