நுவரெலியா கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்தி உதவிக் கல்விப் பணிப்பாளராக நிக்கலஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கான நியமனக் கடிதத்தை நுவரெலியா வலயக் கல்விப் பணிப்பாளர் டீ.எம்.எஸ்.டி.திஸாநாயக்கவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
நுவரெலியா கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்தி உதவிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய கிருபாகரன் ஹட்டன் கல்வி வலயத்திற்கு இடமாற்றம் பெற்றதையடுத்து அப்பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் நுவரெலியா கல்வி வலயத்தின் கோட்டம் 3 இன் கோட்டக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தலவாக்கலை பி.கேதீஸ்
