நாட்டின் மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக பதிவானது செம்மணி

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது புதிதாக மேலும் 14 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 380 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகளிலேயே அதிக எண்ணிக்கையிலான என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழியாகச் செம்மணி மனிதப் புதைகுழி பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட இப்புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 27ஆம் நாள் அகழ்வு நேற்று நடைபெற்றது.

நேற்று நடைபெற்ற அகழ்வாய்வின் போது, புதிதாகச் சிறுவர்களின் மூன்று என்புத் தொகுதிகள் உட்பட 14 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அவை தூய்மைப்படுத்தப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளன. மேலும், குழந்தை ஒன்றினது என்புத் தொகுதி மற்றும் சிறுவர் ஒருவரினுடைய என்புத் தொகுதி உட்பட மொத்தமாக 5 மனித என்புத் தொகுதிகள் நேற்று முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, செம்மணி மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத் தளம் ஒன்று மற்றும் இரண்டிலிருந்தும் இதுவரை மொத்தமாக 380 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றுள் 362 மனித என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் இதுவரை பல்வேறு காலகட்டங்களில் 17 மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நேற்றைய புதிய கண்டுபிடிப்பை அடுத்து, இலங்கையின் மனிதப் புதைகுழி வரலாற்றில் செம்மணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இதற்கு முன்னர் முதலிடத்திலிருந்த ஏனைய புதைகுழிகளின் விவரங்கள் வருமாறு:-

* மன்னார் சதொச மனிதப் புதைகுழி (இரண்டாவது இடம்)

கடந்த 2018ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இப்புதைகுழியில் 28 சிறுவர்களின் என்புத் தொகுதிகள் உட்பட 376 மனித என்புத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டு, இதுவரை இரண்டாவது பெரிய புதைகுழியாகக் காணப்படுகின்றது.

* மாத்தளை மனிதப் புதைகுழி (மூன்றாவது இடம்)

கடந்த 2013ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இப்புதைகுழியில் 155 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு, மூன்றாவது பெரிய புதைகுழியாகக் கருதப்படுகின்றது.

செம்மணி மனிதப் புதைகுழியின் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் 9 நாள்களும், இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் 45 நாள்களும், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளில் நேற்று வரை 27 நாள்களும் என மொத்தமாக இதுவரை 81 நாள்கள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.ளை வரையிலான பயணிகள் புகையிரத சேவை எதிர்வரும் சனிக்கிழமை (20) மீள ஆரம்பிக்கப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

புகையிரத திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மலையக புகையிரத பாதையில் நானுஓயா முதல் அம்பேவெல வரையான புகையிரத பாதையை புனரமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது.

இதற்கமைய மலையக புகையிரத சேவையில் நானுஓயா முதல் பதுளை வரையிலான பயணிகள் புகையிரத சேவை சனிக்கிழமை மீள ஆரம்பிக்கப்படும்.

விசேட நேர அட்டவணைக்கமைய, நானுஓயா முதல் பதுளை வரையிலான பயணிகள் புகையிரத சேவை ஆரம்பிக்கப்படும்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles