நுவரெலியா லயன்ஸ் கழகத்தின் புதிய தலைவராக பெரியசாமி தெரிவு

நுவரெலியா லயன்ஸ் கழகத்தின் 2026-2027 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக மகாலிங்கம் பெரியசாமி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற கழகத்தின் உத்தியோகபூர்வ பதவியேற்பு விழாவில் அவர் தனது பதவியை ஏற்றுக்கொண்டார்.

நுவரெலியா, லவர்ஸ்லீப் (Lovers Leap) தோட்டத்தைச் சேர்ந்த மகாலிங்கம் – செல்லம்மா தம்பதியரின் புதல்வரான மகாலிங்கம் பெரியசாமி, தனது ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியில் (Holy Trinity Central College) பயின்றார்.

தொடர்ந்து கொட்டகலை ஆசிரியர் பயிற்சி கலாசாலைக்குத் தெரிவு செய்யப்பட்டு, 1997 ஆம் ஆண்டு பட்டதாரி ஆசிரியராகத் தனது கல்விச் சேவையை ஆரம்பித்தார். அவர் தற்போது நுவரெலியா பம்பரகலை வித்யாலயத்தின் அதிபராகச் செயலாற்றி வருகின்றார்.

இவர் கொழும்பு தேசிய கல்வி நிறுவகத்தில் (NIE) கல்வி இளமாணி (B.Ed) பட்டத்தைப் பெற்றுள்ளதுடன், பல்வேறு பொது அமைப்புகளிலும் இணைந்து தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றார்.

குறிப்பாக, நுவரெலியா இந்து கலாசார பேரவை மற்றும் சீதாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலய நிர்வாகச் சபை ஆகியவற்றில் பல முக்கிய பதவிகளை வகித்துச் சேவை செய்துள்ளார்.

நுவரெலியா லயன்ஸ் கழகத்தில் கடந்த 7 வருடங்களாக உறுப்பினராகத் தொடர்ச்சியாகப் பணியாற்றி வந்த நிலையிலேயே, தற்போது அவர் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவருடன் கழகத்தின் புதிய செயலாளராக பாலகிருஷ்ணன் விதுசாந்த் மற்றும் பொருளாளராக ஆர். குணசேகரன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

நுவரெலியா லயன்ஸ் கழகமானது 60 ஆண்டுகளைக் கடந்து, மலையகப் பிராந்தியத்தில் தொடர்ச்சியான சமூக மற்றும் மக்கள் நலச் சேவைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles