“ சந்தேக நபர்களின் தேவைக்கேற்ப விசாரணை அதிகாரிகளை நியமிக்க முடியாது. விசாரணைகள் உரிய வகையில் இடம்பெறும்.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சுரேஷ் சலே விவகாரம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
“ விசாரணைகள் அனைத்தும் துரிதமாக இடம்பெற்றுவருகின்றன. உள்ளக விசாரணைகள் பற்றி ஊடகங்களுக்கு தெரியாவிட்டாலும், நீதிமன்றத்துக்கு தெளிவுபடுத்தப்படுகின்றது.
விசாரணைகள் சிறப்பாக நடைபெறுகின்றது என்பதையே சந்தேக நபர்கள், குற்றமிழைத்தவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை எடுத்துகாட்டுகின்றது.
சந்தேக நபர்களின் தேவைக்கேற்ப, விசாரணை அதிகாரிகள் வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகின்றது. எப்படி செய்ய முடியாது. பொலிஸார் முறையாக விசாரணை நடத்துவர். சுரேஷ் சலேவின் சுகாதார நிலைமை தொடர்பில் வைத்தியர்கள் கண்காணித்துவருகின்றனர்.” – என்றார்.










