அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளார்.
தனது சட்டத்தரணிகளின் ஆலோசனை மற்றும் கோரிக்கைகளை அடுத்தே சலே இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்ட சலே, சிஐடி காவலில் இருந்தபோது இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன், அங்கு அவர் இரண்டு வாரங்களுக்கும் மேலாக தங்கியிருந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி இன்னும் சிஐடி காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, சுரேஷ் சலே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தாலும், அவருக்கு தேவையான போசாக்கு மற்றும் தேவையான மருந்துகள் வழங்கப்பட்டு வந்தன என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டிருந்தார்.










