ஈரானுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் பஸீஹா அஸ்மி 𝑷𝒓𝒐𝒇. 𝑭𝒂𝒛𝒆𝒆𝒉𝒂 𝑨𝒛𝒎𝒊 , ஜூன் 30ஆம் திகதி தெஹ்ரானிலுள்ள உள்ள இலங்கைத் தூதரகத்தில் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், இவருடைய நியமனத்திற்கு நாடாளுமன்றத்தின் உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி கிடைத்திருந்தது.
ஈரானுக்கான தூதுவர் பதவியைப் பொறுப்பேற்பதற்கு முன்னர், அவர் பல வருடங்களாகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
மாவனெல்லை ஜாஹிரா கல்லூரியின் பழைய மாணவியான இவர், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது உயர்கல்வியைத் தொடர்ந்தார்.
அங்கு புவியியல் துறைக்காக 1995ஆம் ஆண்டில் முதலாம் வகுப்புத் தேர்ச்சியுடன் (First Class) தனது இளங்கலை (BA) பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.
அதன் பின்னர், அவர் 1996ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
நோர்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (NTNU) வழங்கும், வளரும் நாடுகளின் சமூக மாற்றம் (அபிவிருத்தி ஆய்வுகள்) குறித்த தத்துவமாணி (MPhil) பட்டத்தைப் படிப்பதற்கான கல்வித்தொகையை 1997இல் பெற்றார்.
அதே பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் கலாநிதி (PhD) பட்டத்தைப் படிப்பதற்கான கல்வித்தொகையையும் 2004ஆம் ஆண்டில் அவர் பெற்றுக்கொண்டார்.
பின்னர், அதே நோர்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 2016 முதல் 2018 வரையிலான காலப்பகுதியில் தனது போஸ்ட்-டாக்டோரல் (Postdoctoral) உயர்கல்வியையும் அவர் நிறைவு செய்துள்ளார்.
1996ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகத் தனது சேவையைத் தொடங்கிய பேராசிரியர் ஃபசீமா, 2001ஆம் ஆண்டில் தரம் II சிரேஷ்ட விரிவுரையாளராகப் (Senior Lecturer Grade II) பதவியுயர்வு பெற்றார் எனப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.










