ஈரான் முன்னாள் உச்ச தலைவரின் இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் பிரதமர் பங்கேற்பு

மறைந்த ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்த வாரம் கலந்து கொள்ளவுள்ளார்.

பிரதமர் ஷெரீப் ஜூலை 3 முதல் 5 ஆம் தேதி வரை ஈரான் மற்றும் துருக்கியே ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தாஹிர் ஆண்ட்ராபி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை கடுமையாக விமர்சித்து வந்த 86 வயதான ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி, ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரின் முதல் நாளில் (பெப்ரவரி 28) கொல்லப்பட்டார்.

அவர் 36 ஆண்டுகள் ஈரானின் உச்ச தலைவராக இருந்தார்.

அவரது இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தெஹ்ரானில் தொடங்கி, ஜூலை 9 அன்று அவரது சொந்த ஊரான வடகிழக்கு நகரமான மஷாட்டில் (Mashhad) அவரது அடக்கத்துடன் நிறைவடையும்.

Related Articles

Latest Articles