1948 முதல் ஏமாற்றப்பட்டுவரும் மலையக தமிழர்: இனியும் அதற்கு இடமளியோம்!

“1948 ஆம் ஆண்டு முதல் மலையக தமிழர்கள், அரசாங்கங்களால் ஏமாற்றப்பட்டுவருகின்றனர். இன்றுவரை அந்நிலைமை தொடர்கின்றது.” – என்று மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வீரசிங்கம் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,

“ ஆரம்ப காலம் முதலே, மலையக மக்களின் வாக்குகளைக் கொள்ளையடிப்பதே ஆட்சியாளர்களின் நோக்கமாக இருந்ததேவிர, பிரஜைகள் என்ற வகையில் அம்மக்களுக்கு கிடைக்கப்பெற வேண்டிய உரிமைகள் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும், மலையக மக்களை கடந்த இரு வருடங்கள் ஏமாற்றியுள்ளது. எனவே, எமது மக்கள் இனிமேலும் ஏமாற்றப்படுவதற்கு இடமளிக்கமாட்டோம். ஏமாற்றும் கலாசாரத்தை மாற்றுவோம்.

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட ஏனைய மக்களுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ள அனைத்தும் , மலையக மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.”- என்றார்.

 

Related Articles

Latest Articles