நாட்டில் கடந்த 4 நாட்களில் மாத்திரம் டெங்கு நோயால் 4ஆயிரத்து 251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2026 ஜனவரி முதல் ஜுலை 04 வரையான காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் 59 ஆயிரத்து 638 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இக்காலப்பகுதியில் பதுளை மாவட்டத்தில் 764 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 340 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.
மேல் மாகாணத்திலேயே 31 ஆயிரத்து 249 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த பாதிப்பில் 52.40 சதவீதமாகும்.
142 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவு, அதி அபாய டெங்கு வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

