நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு கைதி உயிரிழந்துள்ளார். இதன் மூலம் இந்த மோதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
சிறைச்சாலை அதிகாரிகள் 7 பேரும், கைதிகள் 20 பேருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, காயமடைந்த 23 சிறைச்சாலை அதிகாரிகளும் 53 கைதிகளும் நீர்கொழும்பு மற்றும் கொழும்பு வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.










