அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம், ஈரானுக்குள் 80 மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சர்வதேச கடல்வழி வணிகப் பாதையில் (ஹார்முஸ் நீரிணை) பயணிக்கும் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்த ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈரானியப் படைகளின் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், ரேடார் நிலையங்கள் மற்றும் அறுபதுக்கும் மேற்பட்ட சிறிய படகுகளை அமெரிக்கப் படைகள் குறிவைத்து அழித்துள்ளன.
வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் கட்டுப்பாட்டு மையங்களைச் சிதைப்பதன் மூலம் ஈரானின் தாக்குதல் நடத்தும் திறனைக் குறைப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) மூன்று எண்ணெய் கப்பல்கள் (Oil tankers) மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சகம் சாடியுள்ளது. மேலும் இது அமெரிக்க அரசாங்கத்தின் நம்பகத்தன்மையற்ற, நிலையற்ற மற்றும் மோசமான அணுகுமுறையை நிரூபிப்பதாகக் கூறியுள்ளது.
