பதிலடி பயங்கரமாக இருக்கும்: ஈரான் எச்சரிக்கை

ஈரானின் தெற்குப் பகுதிகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை அந்நாட்டு ராணுவம் கடுமையாகக் கண்டித்துள்ளது.

இந்த நடவடிக்கையை ஒரு நேரடி ஆக்கிரமிப்பு என்று சுட்டிக்காட்டியுள்ள ஈரான், இதற்குப் பதிலடியாகப் பயங்கரமான தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளது.

குறிப்பாக, உலக வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்காவின் தலையீட்டைத் தாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று ஈரான் ராணுவம் தெளிவுபடுத்தியுள்ளது.

அந்த கடல் வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் டேங்கர்கள் ஈரானால் தீர்மானிக்கப்படும் பாதுகாப்பான வழித்தடங்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான ராணுவ மோதல் மற்றும் பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

Related Articles

Latest Articles