நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கு எதிரணிகள் நடவடிக்கை எடுத்துவருகின்றன.
நீர்கொழும்பு சிறைச்சாலையினுள் கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்கள் காரணமாக உயிரிழந்த சிறைச்சாலை அலுவலர்கள் மற்றும் கைதிகளின் பாதுகாப்புக்கு தனது பதவியின் கடமைகளையும் சரிவர நிறைவேற்றத் தவறியமைமை தொடர்பிலேயே நீதி அமைச்சருக்கு எதிராக பிரேரணை வருகின்றது.
இதற்கிணங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று பாராளுமன்றத்தில் குறித்த இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திட்டனர்.










