பெருந்துயர்! விபத்தில் இரு இளைஞர்கள் பலி!!

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் படலிய சந்திக்கு அருகில் நேற்று (10) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.

ரதாவடுன்ன பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள்மீது, அதே திசையில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து மோதியுள்ளது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், எதிரே வந்த லொறி ஒன்றுடன் மோதி அதற்குள் சிக்கியுள்ளது.

இவ்வாறு மோட்டார் சைக்கிளானது ஒரே நேரத்தில் பேருந்து மற்றும் லொறி ஆகிய இரண்டு வாகனங்களுடனும் மோதியதாலேயே இந்த கொடூர விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபத்தில் படுகாயமடைந்த இரு இளைஞர்களையும், அப்பகுதி மக்களும் பொலிஸாரும் இணைந்து உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படும் முன்பே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பாக நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles