தனது தந்தையின் மரணத்திற்குப் பழிவாங்குவது என்பது தேசத்தின் கோரிக்கை என்றும், அது நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் ஈரானின் புதிய உச்ச தலைவர் ஆயதுல்லா மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார்.
56 வயதான மொஜ்தபா கமேனியின் அதிகாரப்பூர்வ டெலிகிராம் (Telegram) கணக்கில் இந்த எழுத்துப்பூர்வ செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனி, கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்க – இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டார். அவரது மறைவிற்கான இறுதிச் சடங்குகள் இந்த வாரம் முழுவதும் நடைபெற்றன.
யுத்தம் தொடங்கியது முதல் இந்த மர்மமான மதகுரு (மொஜ்தபா கமேனி) இதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை. இதனால் அவரது உடல்நிலை குறித்தும், நாட்டை வழிநடத்தும் அவரது திறன் குறித்தும் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
