இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற மூத்த பின்னணிப் பாடகி, ‘ஜானகி அம்மா’ என்று அன்போடு அழைக்கப்படும் எஸ். ஜானகி (88), வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று இயற்கை எய்தினார்.
ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த தனது இசைப் பயணத்தில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உட்பட 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் சுமார் 48,000 பாடல்களைப் பாடி உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான இசை ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர்.
4 தேசிய விருதுகளையும், 33 மாநில அரசு விருதுகளையும் வென்று சாதனை படைத்தவர்.
அவரது மறைவு இந்திய இசைத்துறையில் ஒரு பொற்காலத்தின் முடிவைக் குறிக்கிறது. ஜானகி அம்மாவின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
இசைக்குயிலின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். உங்களது குரல் இந்த மண்ணில் என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
தமிழ் சினிமாவின் எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்கள் இசையில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.
மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட ஏராளமான மொழிகளிலும் பாடி, உலகளவில் நன்று அறியப்பட்ட பாடகியாவார்.
