தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள புதிய கூட்டணி, வெறும் ‘கூட்டுச் சாம்பார்’ போன்றதே தவிர, அது மக்களுக்கான கூட்டணியல்ல என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத் திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
” எத்தனை கூட்டணிகளை அமைத்தாலும் தேசிய மக்கள் சக்தி அரசை யாராலும் அசைக்க முடியாது. அவர்கள் கூட்டணிகளை அமைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். நாங்கள் மக்களோடு கூட்டணி அமைத்து, மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.










