பல மடங்கு பலத்துடன் பதிலடி: ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

தங்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட வேண்டாம் என ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டால் முந்தைய மோதல்களை விட இன்னும் பலமடங்கு கடுமையான முறையில் பதிலடி கொடுக்கும் என்று கூறியுள்ளார்.

இஸ்ரேலின் தெற்கு நெகெவ் (Negev) பாலைவனப் பகுதியில் உள்ள டிமோனா (Dimona) நகரில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றிய அவர், “யாராவது எங்களைத் தாக்கினால், அதற்கு நாங்கள் இரு மடங்கு பலத்துடன் பதிலடி கொடுக்காமல் இருக்கும் காலம் எப்போதோ கடந்துவிட்டது,” என்று கூறினார்.

மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலின் அணு உலைக்கு அருகிலேயே இந்த டிமோனா நகரம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்பிராந்தியத்தில் அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள ஒரே நாடு இஸ்ரேல் மட்டுமே என்று பரவலாக நம்பப்படுகிறது.

கடந்த பெப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதல்களுடன் இப்போரானது தொடங்கிய போதிலும், கடந்த வாரம் வெடித்த புதிய மோதல்களில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நேரடித் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை.

அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், வளைகுடாப் பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களை இலக்கு வைத்தே ஈரான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்நிலையிலேயே இஸ்ரேல் இவ்வாறு எச்சரித்துள்ளது.

Related Articles

Latest Articles