நுவரெலியா, இஸ்கிராப் தோட்டத்தைச் சேர்ந்த Sun Birds FC விளையாட்டுக் கழகத்தின் வீரர் ஜோன் ஸ்டீபன் ராஜ் , இலங்கையின் உயரிய கால்பந்து தொடரான சூப்பர் லீக் போட்டியில் , ப்ளூ ஈகல்ஸ் அணிக்காக முன்கள வீரராக விளையாடி வருகின்றார்.
அவர் தனது திறமையை மேலும் வலுப்படுத்தி, சாதனைகளைப் படைத்து, எதிர்காலத்தில் இலங்கை தேசிய கால்பந்து அணியில் இடம்பிடித்து நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என பல தரப்பினரும் உற்சாகப்படுத்தி – வாழ்த்தி வருகின்றனர்.
மலையக இளைஞர்கள் இவ்வாறு நாட்டின் உயர்மட்ட விளையாட்டு அரங்குகளில் தங்களது திறமையை வெளிப்படுத்துவது, மலையக மக்களுக்கே பெருமையையும், அடுத்த தலைமுறைக்கு ஊக்கத்தையும் அளிக்கும் சிறப்பான நிகழ்வாகும்.
ஜோன் ஸ்டீபன் ராஜ், இலங்கையின் கால்பந்து வரலாற்றில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து, நாட்டிற்கும் மலையகத்திற்கும் பெருமை சேர்க்க இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்!
