முன்னாள் அமீரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பிரதமர் கத்தார் பயணம்

கத்தாரின் முன்னாள் அமீரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பிரதமர் ஹரிணி அமரசூரிய தோஹா பயணம்!

கத்தாரின் முன்னாள் அமீர் (Father Emir) ஷேக் ஹமத் பின் கலீபா அல் தானியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக, பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று (ஜூலை 14) இரவு கத்தார் நாட்டின் தோஹா நகருக்குப் புறப்பட்டுச் சென்றார்.

பிரதமர் மற்றும் அவரது தூதுக்குழுவைச் சேர்ந்த மற்றொரு உறுப்பினர் உள்ளடங்கிய குழுவினர் நேற்று மாலை 6:50 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-217 விமானம் மூலம் தோஹா நோக்கிப் பயணித்தனர்.

இதேவேளை, கத்தார் நாட்டின் முன்னாள் அமீரின் மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றும் இதே விமானத்தில் தோஹா நகருக்குப் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles