க.பொ.த சா/த 2026 : அனைத்து மாணவர்களுக்குமான அறிவித்தல்

இதுவரை தேசிய அடையாள அட்டையைப் (NIC) பெற்றுக்கொள்ளாத, 2026 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள தனிப்பட்ட (Private) விண்ணப்பதாரர்கள், தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதன்கிழமை (15) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை ஒன்றில், பரீட்சைக்கான இணையவழி (online) விண்ணப்பங்கள், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஜூலை 3 முதல் ஜூலை 23 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதுவரை தேசிய அடையாள அட்டையைப் பெற்றிராத பாடசாலை விண்ணப்பதாரர்கள், விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும்போது அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்.

தேசிய அடையாள அட்டை இல்லாத தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள், தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்திப் பதிவுசெய்து, விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தேசிய அடையாள அட்டையைப் பெறவில்லை என்ற காரணம், ஜூலை 23 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிப்பதைத் தடையாகக் கொண்டிருக்கக் கூடாது என திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. அத்துடன், எக்காரணம் கொண்டும் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட மாட்டாது என்றும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

மேலதிக தகவல்கள் தேவைப்படும் விண்ணப்பதாரர்கள், திணைக்களத்தின் உடனடி அழைப்பு இலக்கமான 1911 அல்லது பின்வரும் தொலைபேசி எண்களின் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்: 0112-784537, 0112-786616, 0112-784208.

Related Articles

Latest Articles