நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 17 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 74 ஆயிரத்து 478 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜூலை மாதத்தின் கடந்த 17 நாட்களில் மாத்திரம் 19, 100 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்துக்குள் 1,024 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 3 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளன.
மேல் மாகாணத்தில் மாத்திரம் 39, 281 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.











