கொழும்பில் கட்டுமானத் துறை அதிகரிப்பால் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்

உங்களது எதிர்காலத்தை பிரகாசமாக மாற்றக்கூடிய, 2027 இல் மிக அதிக தேவையுள்ள ஒரு துறையைத் தேடிக்கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பு இதோ! உடனடி வேலை மற்றும் முன்பதிவு செய்யும் அளவிற்கு டிமாண்ட் நிறைந்த துறைகள் பற்றிய செய்தி இது.

இலங்கையின் வேகமாக விரிவடைந்து வரும் கட்டுமானத் துறை கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது என்றும், இதனால் வெளிநாடுகளில் இருந்து திறன் பணியார்களை (skilled workers) வேலைக்கு அமர்த்த வேண்டிய நிலை இலங்கைக்கு ஏற்படலாம் என்று கட்டுமானத்துறை பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.

பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதி அமைச்சர், மின்சார வல்லுநர்கள் (Electricians) மற்றும் வெல்டர்கள் (Welders) போன்ற நிபுணத்துவம்மிக்க கைவினைஞர்களைக் கண்டறிவது மேன்மேலும் கடினமாகி வருவதாகவும், அதிகரித்துவரும் தேவை காரணமாக அவர்களில் பலர் பல வாரங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

கட்டுமானத் துறை, குறிப்பாக கொழும்பு நகர்ப்புறத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், அடுத்த ஆண்டின் தொடக்கத்திற்குள் நாட்டிற்கு மேலும் 10,000 இற்கும் மேற்பட்ட திறன் பணியாளர்கள் தேவைப்படுவார்கள் என மதிப்பிட்டுள்ளார்.

அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்காக, அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஆயிரக்கணக்கான திறமையான தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிப்பது அமைச்சின் மிகப்பெரிய சவால்களில் ஒன்று என்றும் சரத் கூறினார்.

இருப்பினும், புதிதாகப் பயிற்சி பெற்ற பல தொழிலாளர்கள் தங்களது பயிற்சியை முடித்தவுடன் தென் கொரியா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு வேலை வாய்ப்புகளுக்காக இலங்கையை விட்டு வெளியேறுவதாகவும், இதனால் திறன் பணியாளர்களை நாட்டில் தக்கவைத்துக் கொள்வது கடினமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“உள்ளூரில் தேவையை எம்மால் பூர்த்தி செய்ய முடியாவிட்டால், வெளிநாடுகளில் இருந்து திறமையான தொழிலாளர்களை நாம் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும்” என்று அவர் கூறினார்.

இலங்கையின் முடுக்கப்பட்ட வளர்ச்சி மற்றும் கட்டுமான நடவடிக்கைகளே திறன் தொழிலாளர்களுக்கான தேவை அதிகரிப்பதற்குக் காரணம் எனக் குறிப்பிட்ட பிரதி அமைச்சர், தற்போது தெற்காசியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இலங்கையும் ஒன்று என்றும் உரிமை கோரினார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles