ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நுவரெலியாவிற்கு விஜயம் செய்தபோது அவருக்கு மக்கள் பெரும் ஆதரவை வழங்கியதாகவும், அந்த ஆதரவு காசு, பணம் கொடுத்து பெறப்பட்டதல்ல என்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நுவரெலியா சென்றிருந்தபோது அவருக்கு மக்கள் பேராதரவை வழங்கினர். காசு, பணம் வழங்கி அந்த ஆதரவைப் பெறவில்லை. மக்களுக்கான சரியான வேலைத்திட்டங்களே அவர்களிடம் முன்வைக்கப்பட்டன. ஜனாதிபதி மிகவும் நேர்மையுடன் செயல்பட்டு வருகின்றார். அதனால்தான் சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களும் அவரைத் தொடர்ந்து ஆதரித்து வருகின்றனர்.”எனவும் அவர் குறிப்பிட்டார்.










