மாத்தளையில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் அமைச்சர் சந்திரசேகர் பங்கேற்பு

சுவாமி விபுலானந்தர் அவர்களின் 79 ஆவது நினைவு தினத்தையும், 102 ஆவது துறவற ஆண்டினையும் முன்னிட்டு, மாத்தளை சுவாமி விபுலானந்தர் கலா மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற முத்தமிழ் விழா, 19.07.2026 அன்று மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். அதேவேளை, புத்தசமய, கலாசாரங்கள் மற்றும் சமய விவகாரங்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.

விழாவின் ஆரம்ப நிகழ்வாக, மாணவர்களின் கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகளுடன் சுவாமி விபுலானந்தரின் நினைவைப் போற்றும் ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் பிரதம அதிதிகளுக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பளிக்கப்பட்டதுடன், சுவாமி விபுலானந்தரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, சுடரேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாணவர்களின் முத்தமிழ் கலைநிகழ்ச்சிகள், இசை, நடனம், இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு பண்பாட்டு நிகழ்வுகள் இடம்பெற்று பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றன.

விபுலானந்தர் நினைவாக பாடசாலை மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட முத்தமிழ் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும், சமூக சேவையில் சிறப்பாகப் பணியாற்றியவர்களும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர். இதன்போது பிரதம அதிதி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், சுவாமி விபுலானந்தர் தமிழ் மொழி, கலை, கல்வி மற்றும் ஆன்மீகப் பணிகளில் ஆற்றிய பங்களிப்பு தலைமுறைகள் கடந்து நினைவுகூரப்பட வேண்டிய பெரும் பாரம்பரியமாகும் என்றும், இளம் தலைமுறையினரிடையே தமிழ் மொழி, முத்தமிழ், ஒழுக்கம் மற்றும் பண்பாட்டு விழுமியங்களை வளர்க்கும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் மதத் தலைவர்கள், கல்வியாளர்கள், அரச அதிகாரிகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles