தற்காலிக தொழிலாளர்களுக்கும் ரூ. 1750 வழங்க நடவடிக்கை எடுக்கவும்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரத்னவிற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் இன்று அமைச்சில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.1,750 சம்பளத்தைப் பெற்றுக் கொடுத்தமைக்காக அமைச்சர் சமந்த வித்தியாரத்னவுக்கு, அரசாங்கத்திற்கும் செந்தில் தொண்டமான் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

மேலும், ரூ.1,750 சம்பளம் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மாத்திரமே வழங்கப்படுவதாகவும், தற்காலிகத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டிய செந்தில் தொண்டமான், தற்காலிகத் தொழிலாளர்களுக்கும் ரூ.1,750 சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

அதேவேளை, தோட்ட தொழிலாளர்களின் 1750 ரூபாய் சம்பளத்தில், அரசாங்கத்தினால் வழங்கப்படும் 200 ரூபாய் கொடுப்பனவை தொழிலாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

வங்கி கணக்கு இல்லாத தோட்டத் தொழிலாளர்களுக்கு, வங்கி கணக்குகளை ஆரம்பிக்க தொழிற்சங்க ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் சமந்த வித்தியாரத்னவிடம் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles