சோகத்தில் முடிந்தது வெற்றிக் களிப்பு: ஸ்பெயினில் 13 வயது சிறுவன் பலி

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றதைக் கொண்டாடிய போது, வடமேற்கு ஸ்பெயினின் சலமன்கா (Salamanca) மாகாணத்தில் நீரூற்றின் (Fountain) ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 13 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

சலமன்காவின் சியூடட் ரொட்ரிகோ (Ciudad Rodrigo) பகுதியில் உள்ள ‘ஆர்போல் கோர்டோ’ (Árbol Gordo) நீரூற்றுப் பகுதிக்குள் இறங்கி பொதுமக்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே, உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 00:30 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் மேலும் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளதாக அவசர சேவைகள் பிரிவு பிபிசிக்குத் தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்களில் ஒரு சிறுவனின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகக் சந்தேகிக்கப்படும் நிலையில், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொண்டாட்டத்தின் போது சிலர் நீரூற்றின் மீது ஏறியதால் அதன் கட்டமைப்பு தாங்க முடியாமல் பகுதியளவில் இடிந்து விழுந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“ஸ்பெயின் தேசிய கால்பந்து அணியின் உலகக் கோப்பை வெற்றியைக் கொண்டாடும் ஒரு மகிழ்ச்சியான தருணமாக அமைய வேண்டிய ஒன்று, தற்போது பெரும் துயரமாக மாறியுள்ளது” என சியூடட் ரொட்ரிகோ நகர சபை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கவலை தெரிவித்துள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles