மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக குவைத்திற்கான தனது விமான சேவைகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை (CAASL) அறிவித்துள்ளது.
இதன்படி, குவைத்திற்கான விமான சேவைகள் நேற்று (20) முதல் 2026 ஜூலை 26 வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
கூடுதல் தகவல்கள் அல்லது உதவிகள் தேவைப்படும் பயணிகள், இலங்கைக்குள் 1979 என்ற இலக்கத்தின் மூலமாகவும், சர்வதேச அளவில் +94 11 777 1979 என்ற இலக்கத்தின் மூலமாகவும், வாட்ஸ்அப் வழியாக +94 74 444 1979 (மெசேஜ் மட்டும்) மூலமாகவும் விமான நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம், அல்லது தங்கள் பயண முகவரைச் அணுகலாம் அல்லது ஸ்ரீலங்கன் ஏர்லைான்ஸின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.










